கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
குனியமுத்துார் துணை மின் நிலையம்: குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் (ஒரு பகுதி).
அண்ணா பல்கலை துணை மின் நிலையம்: கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.,காலனி, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ்.அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம்பாளையம் மற்றும் மகாராணி அவென்யூ 1, 2, 3.

