கோவை மாவட்டம் போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 9 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் மே 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள்) போத்தனூரிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028), அதே நாள் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
இதேபோல், மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06027), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மே 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

