மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் இருகூா் இருகூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 12) நடைபெற உள்ளது.

இதனால் இருகூா், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.