சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய நூலக அறிவியலின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஆர். இரங்கநாதன் பிறந்தநாள் தேசிய நூலகர் தினம்  ஆகக் கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களுக்காக பொது அறிவு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் ராஜ்குமார் வழங்கினார். கல்லூரி தாளாளர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ச்சி நடைபெற்றது.