இந்திய மருத்துவ சங்கம் கோயம்புத்தூர் கிளை சார்பில், சர்வதேச செவிலியர் தின விழா நடைபெற்றது. இதில் 63 துணை மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநிலக் கிளை தலைவர் தேர்வாளர் டாக்டர் ரவிக்குமார், துணை தலைவர் டாக்டர் சண்முகசுந்தரம், டாக்டர் கார்த்திக் பிரபு, முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் சீதாராம், கோயம்புத்தூர் கிளை தலைவர் டாக்டர் கோஷல்ராம், கௌரவ செயலாளர் டாக்டர் பரமேஸ்வரன், பொருளாளர் டாக்டர் பாலமுருகன், மகளிர் மருத்துவர்கள் பிரிவு சார்பில் டாக்டர் அனுஷா கோஷல்ராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.