கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக 58 தனியார் பள்ளிகளை சேர்ந்த 535 வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அவசரகால வழி, முதலுதவிப்பட்டி, ஜிபிஆர்எஸ் கருவி, கண்காணிப்பு கேமரா, தீயணைப்பான்கள் உள்ளிட்ட 25 அம்சங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் சார்பாக வாகனங்களில் உள்ள தீயணைப்பு கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், மாணவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றும் பொழுதும் இறக்கும் பொழுதும் எவ்வாறு செயல்பட வேண்டும், மேலும் வாகனத்தின் பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
