அமெரிக்க, சீன வரி குறைப்புகளால் இந்திய ஏற்றுமதியில் ஏற்படும் தாக்கம் குறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு விளக்கியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 90 நாட்களுக்கு 125% லிருந்து 10% ஆகக் குறைக்க சீனாவின் சமீபத்திய முன்மொழிவும், சீனப் பொருட்களுக்கான வரிகளை 145% லிருந்து 30% ஆகக் குறைக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.இவை இந்தியாவிற்கு சவால்கள், வாய்ப்புகள் இரண்டையும் முன்வைக்கின்றன.
வரிகளைக் குறைப்பது மின்னணுவியல், இயந்திரங்கள், ரசாயனங்கள் போன்ற அதிக மதிப்புள்ள பிரிவுகளில் அமெரிக்க, சீன இருதரப்பு வர்த்தகத்தில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன், அமெரிக்கா போன்ற மூன்றாம் நிலை சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான போட்டியை தீவிரப்படுத்தக்கூடும்.
அமெரிக்க, சீன வர்த்தகத்திலிருந்து ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட துறைகளான மருந்து APIகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், பொறியியல் பொருட்கள், கரிம ரசாயனங்கள் மற்றும் ஐ.டி சார்ந்த சேவைகள் போன்றவற்றில் ஏற்றுமதியை வலுப்படுத்த இந்தியா இந்த மாற்றத்தைப் பயன்படுத்தலாம்.
கட்டணக் குறைப்புகளின் தற்காலிக தன்மை, மேக் இன் இந்தியா மற்றும் பி.எல்.ஐ திட்டங்களின் கீழ், மின்னணுவியல், ஆட்டோ கூறுகள் மற்றும் ஜவுளித் துறைகளில் இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்துவதன் மூலம் எதிர்கால ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக நிறுவனங்கள் பாதுகாக்க வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.