கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நிலம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு, கல்லூரிகளில் பயிலும்  மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்குவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் முத்துராஜா  தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஜவுளித்துறை ஆலோசகர் கருப்புசாமி, 23 வது மாமன்ற உறுப்பினர் சித்ரா மணியன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத்தலைவர் முரளிதரன், கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாசம் மற்றும் வனம் இந்தியா பவுண்டேசன் தலைவர் ஆனந்த கிரிட்டினன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நிலங்களை வரன் முறை செய்தததில் தமிழர்களின் பங்கு குறித்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டன.

2 17

இது குறித்து இந்த மையத்தின் இயக்குனர் முத்துராஜா கூறுகையில்: இந்த கண்காட்சி, வரலாற்று ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நில மேலாண்மை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வாயிலாக, கிராம புற விவசாயிகளுக்கு  நிலப் பயன்பாடு, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய நில மேலாண்மை துறைகள் தொடர்பான பணிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகளை இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.