கோவை மாநகரில் மழைக்கான சூழல் முடிந்துவிட்டதா? இனி வறண்ட வானிலைதான் நிலவுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்யிடம் கேட்டதற்கு அவர் கூறியது :-

இந்த வாரம் (16.8.2026 முதல் 22.8.26 வரை) கோவை மாநகரின் வானிலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. கடந்த வாரத்தைப் போலவே வழக்கமான சூழலே நீடிக்கும். மாநகரின் ஒரு சில பகுதிகளில் இன்றைக்கும் (18.8.26) நாளைக்கும் (19.8.26) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 32°செல்ஸியஸ் முதல் 34° செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும் இவ்வாறு சுஜய் கூறினார்.

பொதுமக்கள் தற்போதைய வெப்பநிலையை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக உணருவதாக கூறுவது எதனால் என கேட்டதற்கு, அவர் காற்றில் உள்ள ஈரப்பதமும் வெப்பநிலையும் இணைந்து நமது உடலுக்குக் இப்படி ஒரு உணர்வை கொடுக்கும். காற்றில் உள்ள ஈரப்பதம் வெப்பமான காற்றுடன் சேரும்போது, அது நீராவியாக மாறி ஒருவித உஷ்ணமான சூழலை உருவாக்குகிறது. இதுவே நமக்கு இப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இதை ஆங்கிலத்தில் ரியல் ஃபீல் டெம்பர்ரேச்சர் என்போம்.