சாதாரணமாக ஏப்ரல், மே மாதங்களில் அதிகம் விற்பனை ஆகும் தர்பூசணி இப்பொழுது கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சந்தையில் இடம் பிடித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் முன்பே தர்பூசணி விற்பனை சீசன் தொடங்கியிருப்பது, வர்த்தகர்களிடமும் மக்களிடமும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.