சிந்தனை கவிஞர் கவிதாசனின் வெற்றி படிக்கட்டுகள், வெற்றியின் விதைகள் 100, சிகரம் தொடு மற்றும் வெற்றிப்பாதை என்ற நான்கு நூல்கள் அறிமுக விழா கோவை, காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஹோட்டல் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ் துறை, தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார்.

கோவை, ஞான சஞ்சீவனம் குருகுலம், நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
கோவை, பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முருகேசன், வெற்றிப்பாதை நூலின் அறிமுக உரையாற்றினார்.

மன்னார்குடி, தமிழ் இலக்கிய ஆய்வறிஞர் மற்றும் நூலாசிரியர், பத்மாவதி, வெற்றிப் படிக்கட்டுகள் நூல் அறிமுக உரையாற்றினார்.
மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின், தமிழாசிரியர் கருணாநிதி, வெற்றியின் விதைகள் நூல் அறிமுக உரையாற்றினார்.

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின், தமிழாசிரியர், பொன். சங்கர், சிகரம் தொடு நூல் அறிமுக உரையாற்றினார்.

விழாவில் ரூட்ஸ் நிறுவனங்கள், இயக்குனர், சிந்தனை கவிஞர் கவிதாசன் ஏற்பரையாற்றி பேசினார்.
