உலக பக்கவாத விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மேம்பட்ட பக்கவாத சிகிச்சை மையம் சார்பில், “பக்கவாதம் – நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மருத்துவமனையின் தலைமைச் செயல் அலுவலர் ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் அசோகன், ஆலோசனை நரம்பியல் மருத்துவர் டாக்டர் அருணாதேவி மற்றும் நரம்பியல் மற்றும் குருதிநாள இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் முத்துராஜன் ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.

பக்கவாதத்துக்கான  காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அவற்றை உடனடியாக அடையாளம் காண வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினர். குறிப்பாக, திடீரென முகம் ஒருபுறமாகக் கோணுதல், கை, கால்களில் பலவீனம் அல்லது உணர்வின்மை, பேசுவதில் சிரமம், திடீர் பார்வைக் குறைபாடு மற்றும் உடல் சமநிலை இழத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று அறிவுறுத்தினர். பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.