ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் நாளை கோவை வருகிறார்.
13 மாவட்டங்களை சேந்த 4000 மகளிருக்கு முதலமைச்சர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி பெருந்துறையில் நாளை (3.11.26) உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.ரூ.1110 கோடி மதிப்பிலான உதவிகளை ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கு நாளை வழங்க உள்ளார் முதலமைச்சர்.
இந்நிலையில், நிகழ்வு நடைபெறவுள்ள வளாகத்தை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் ஆனந்த், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் உடன் இணைந்து துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
நாளை முதலமைச்சர் தனிவிமானம் மூலம் கோவை வந்து, இங்கிருந்து சாலை மார்கமாக ஈரோடு செலவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை & ஈரோடு போலீசார் செய்துள்ளனர்.

