மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஏழாம் அறிவு அமைப்பு சார்பில், நேரு கலை அறிவியல் கல்லூரியில் குரு ரத்னா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தாளாளர் ஜெயபிரபா வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்துகொண்டு 100 ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். வருமான வரித்துறை துணை ஆணையர் ஐஸ்வர்யா, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் உதயா பி.எஸ் மேனன், கல்வியாளர் கணேசன் கலந்துகொண்டனர்.