கோவை மாநகரில் கோடையின் தாக்கம் தனியத் துவங்கி உள்ளது. கடந்த வாரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த சூழலை கோவை மக்கள் பல நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். ஒரு வழியாக இப்போது வானிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பமாகி உள்ளது.
இதுபற்றி கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது :-இந்த வாரம் மே 9 வரை கோவை மாநகரில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதை திங்கள் அன்று கூட காண முடிந்தது. அதே நேரத்தில் மேலடுக்கு சுழற்சி தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தை நோக்கி வந்தால் பரவலாகவே கோவை மாநகரில் வார இறுதியில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். வெப்பத்தை பொறுத்தவரை கோவை மாநகரில் வார இறுதியில் 1° செல்ஸியஸ் குறைய வாய்ப்புள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
