சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் “தன்னம்பிக்கையுடன் பேசுங்கள்: சிறந்த தகவல் தொடர்புத் திறன்களை உருவாக்குதல்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

மாணவர்களின் தகவல் தொடர்புத் திறன், தன்னம்பிக்கை, தனிநபர் உறவுத் திறன் மற்றும் கல்வி மற்றும் தொழில்சார் சூழல்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் ரிச்சர்ட் ராபர்ட் ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

அவர், பயனுள்ள தகவல் தொடர்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, தன்னம்பிக்கையுடன் பேசுவதற்கான நடைமுறை வழிமுறைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சி சுகுணா நிறுவனங்களின் தாளாளர் லக்ஷ்மிநாராயணசாமி, தலைவர் சுகுணா, செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குநர் சேகர், முதல்வர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.