கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை சார்பில் மகளிர் மனிதவள மாநாடு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர். மகளிர் பணியாளர்கள் கல்விப் பிரிவு முதல்வர் சரவண பாண்டி, கவுரவ விருந்தினராக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் சபீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் மனிதவளக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத், மனிதவளக் குழுத் தலைவர் ராணி சக்தி ஸ்ரீ, கோவை கிளைத் தலைவர் மணிகண்டன், மனிதவளக்குழு இணைத் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தலைமைத்துவ அமர்வுகளில், தொழில் வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது, மன உறுதியுடன் முன்னேறுவது, தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் முக்கிய திருப்புமுனைகளை வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நெருக்கடியான சூழ்நிலைகளில் தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்துவது, அன்றாட சிரமங்களை நேர்மறையாக அணுகுவது, பணியிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது மற்றும் தொழில்முறை உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பணிபுரியும் பெண்களுக்கான தற்காப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அமர்வும் நடைபெற்றது.
இதில் மனிதவள நிபுணர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர் கலந்து கொண்டனர்.
