நிர்மலா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் கடந்த 20ம் தேதி முதல் 26ம் வரை
செட்டிபாளையம், ஓராட்டுக்குப்பை பகுதியில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமில் கிராமப்புற வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குனர் (சென்னை) சாமுவேல் செல்லையா கலந்து கொண்டு பேசினார்
பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 130 மாணவியர் பங்கேற்றனர்.
