பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு, தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விருது வழங்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம், சண்டிகர் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 59வது ஆண்டு விழா நடந்தது. அதில், பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
கல்வித்ததரம், தொழில்நுட்ப கல்வியில் சிறப்பு, மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டது.
தேசிய அளவிலான பொறியியல் கல்லுாரிகள் பிரிவில், மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி தேர்வு செய்யப்பட்டது. கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், விருதினை பெற்றுக்கொண்டனர். இந்த விருதைப் பெற்ற கல்லூரி நிர்வாகக் குழுவினர்களை, கல்லூரியின் தலைவர், தாளாளர் பாராட்டினர்.
