ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து நடத்திய “விண்வெளி ஆராய்ச்சி மற்றும் சாதனைகளின் கண்காட்சி” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மைச்  செயல் அலுவலர் ராம்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் டேவிட் ரத்னராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் நூலகர் குமார்  கலந்துகொண்டு மாணவர்களுக்கு விண்வெளித் தொடர்புடைய கருத்துக்களை வழங்கினார்.

02 6 scaled

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியில்   பங்கேற்றனர்.