ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் கணிதத்துறை இணைந்து தொழில்துறை கணிதம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

தொடக்க விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினர்களாக தேசிய அறிவியல் அகாடமியின் மூத்த விஞ்ஞானி மைதிலி சரண்,

பாரதியாா் பல்கலை கணிதம் மற்றும் புள்ளியியல் துறை முன்னாள் இயக்குநர் கந்தசாமி, பாரதியார் பல்கலை கணிதத்துறை தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தில் கோவை மாவட்டத்திற்குட்பட்ட 30 கல்லூரிகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்