இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை மேலாண்மை கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பில் ராயல் எக்ஸ்போ 2026 நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக அமிர்தலட்சுமி சிஎன்சி காம்போனன்ட்ஸ் நிர்வாக இயக்குநர் தினேஷ் குமார், கொடிசியா (அக்ரிஇன்டெக்ஸ்) துணைத் தலைவர் விஜயகுமார், பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்துஸ்தான் கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், துணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சண்பகவல்லி மற்றும் துறை தலைவி சபிதா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.

எக்ஸ்போவில் மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்ட அங்காடிகளை நிறுவி அதன் மூலம் தங்களுடைய மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் திறனை வெளிப்படுத்தினர். கோவையைச் சார்ந்த பல கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேச்சாளர் ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் ஒரு சிறப்பு அமர்வை நடத்தினார். “கல்வியே சிறந்த ஆயுதம்” என்ற தலைப்பில், எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நிஜ உலக மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி மற்றும் திறன்களில் சிறந்து விளங்க மாணவர்களை ஊக்குவித்தார்.
