கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஆதி நெக்ஸா ஷோரூமில், மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பலேனோ (Baleno) கார், வியாழக்கிழமை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிமுக விழாவில் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய காரை அறிமுகம் செய்தார்.

நிகழ்வில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய மேலாளர் காயத்ரி, ஆதி மாருதி துணை தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் சீனிவாசன், மாருதி பிராந்திய விற்பனை மேலாளர் சத்யன், ஆதி நெக்ஸா பிசினஸ் ஹெட் சபரி ஆகியோர் கலந்து கொண்டனர்.