கோவை, ராயல் கேர் மருத்துவமனையின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையத்தில் ‘ராயல் கேர் கே.பி.எஸ்  மருத்துவமனை’ திறப்பு விழா நடைபெற்றது. அதிநவீன வசதிகளுடன் கூடிய கேத் லேப், வெளிநோயாளி மற்றும் உள்நோயாளி பிரிவுகளுடன் இந்த மருத்துவமனை செயல்படும்.

3b 3 scaled

திறப்பு விழாவில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

3a 4 scaled

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், நியூரோ & ஸ்பைன் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே. மதேஸ்வரன் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ராயல் கேர் மருத்துவமனையின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

4c 1 scaled

டாக்டர் மாதேஸ்வரன் கூறுகையில்: மேட்டுப்பாளையம் பகுதியில் கேத் லேப் வசதியுடன் கூடிய முதல் மருத்துவமனை இதுவாகும். இதன் மூலம் அவசர இதய சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கோவை வரை செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு, உள்ளூரிலேயே சர்வதேச அளவிலான சிகிச்சைகளைப் பெற முடியும் என்றார்.