உலக பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2026 (தற்போது வரை) ஒரு சவரன் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது என, தங்க நகை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு அதிகம் உள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகள் சிறந்த லாபத்தை பெற்று தரும் என தங்க நகை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது:
உலக பொருளாதார நிலைத்தன்மை இல்லாத காரணத்தால் இந்தியாவில் ரிசர்வ் வங்கி உட்பட அனைத்து நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தில் அதிகளவு முதலீடுகளை செய்து வருகின்றன. எதிர்வரும் காலங்களில் அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,091 அமெரிக்க டாலராக உள்ளது. ஒரு அவுன்ஸ் என்பது 31.1035 கிராம். இந்திய ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இல்லையெனில் இன்று ஒரு சவரன் தங்கம் 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருக்கும். எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

கடந்த 2026 ஆண்டு ஜனவரியில் சொக்க தங்கம் 18,300 ரூபாயாக இருந்தது. தற்போது 14,900 ரூபாயாக உள்ளது. விரைவில் 2,000 ரூபாய் அதிகரித்து ஜனவரியில் காணப்பட்ட நிலைக்கு திரும்பும். தங்கம் இறக்குமதிக்கு முன்பு 6 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 9 சதவீதம் உயர்த்தியது. இதனால் தற்போது தங்கம் இறக்குமதிக்கு 15 சதவீத வரி விதிக்கப்படுகிறது. தங்கம் விலை உயர்விற்கு இறக்குமதி வரி விதிப்பும் முக்கிய காரணமாகும்.

டிசம்பர் மாதத்திற்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,22,000-த்தை தாண்டும். கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2026 (தற்போது வரை) ஒரு சவரன் தங்கத்தின் விலை 80,245 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீது முதலீடு செய்வது மக்களுக்கு மிகுந்த பயன் தரும். தங்கம் சேமிப்பு நடவடிக்கைகள் மிகச் சிறந்த லாபத்தை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.