கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் 24×7 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளான திருச்சி சாலையில் போத்தீஸ் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் கல்லூரி முதல் ஐடிஐ வரையிலும் மற்றும் சத்தியமங்கலம் சாலையில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம் வரையிலும் மற்றும் மாநில நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சித்ரா வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், குழாய் பதிக்க வெட்டப்படும் தார் சாலை பகுதிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் மாநகராட்சியின் மூலம் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களாலும் மற்றும் அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
