நாள்பட்ட வலிகளுக்கான நவீன சிறப்பு சிகிச்சை மையமான ‘ரெசிலியோ தி பெயின் கிளினிக்’, கோவை ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் சாலையில் திறக்கப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக ‘வலியற்ற கோவை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆக்சான் அனஸ்தீஷியா அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஹைதராபாத்திலுள்ள கேர் மருத்துவமனைகளின் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் கோபால், பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் காவல் துறை கூடுதல் இயக்குநர் பாரி, தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஹரி நிஷாந்த், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரெசிலியோ தி பெயின் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் வலி மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர்.செந்தில் பிரகாஷ் மோகன் மற்றும் இணை நிறுவனர் டாக்டர். ஷஜிதா பேகம் நைனா முன்னிலை வகித்தனர்.