தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில், காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு குறித்த திறன் சார்ந்த மூன்று நாள் பயிற்சி முகாம், நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க கட்டணமாக ரூ.5,370 செலுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்வது அவசியம். பயிற்சிக் கட்டணத்தை நேரடியாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு 0422-6611336, 0422-6611226 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
