தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து நவம்பர் 6ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை – போத்தனூர் சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமர்க்கமாக போத்தனூரில் இருந்து நவம்பர் 9ம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் போத்தனூர் – சென்னை சிறப்பு ரயில், மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக். 29) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
