கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (17.7.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள் :

எல்லப்பாளையம் துணை மின் நிலையம் : சந்தியா நகர், எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், கிருஷ்ண கவுண்டன்புதூர், அண்ணாமலை நகர், வேலாயுதம்பாளையம், செம்மானி செட்டிபாளையம்.

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம் : செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூர், மோப்பிரிபாளையம், நாராணபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம்.

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் எந்த மின்தடையும் நடைபெறுவதாக அறிவிப்பு இல்லை.