பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ. 15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பிரம்மாண்ட தர்ப்பண மண்டபத்தின் கும்பாபிஷேகம் இன்று (05-02-2025) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட தர்ப்பண மண்டபம் அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வு மண்டபம் வளாகத்தில் நடைபெற்றது.