டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் பன்னாட்டு வணிகவியல் துறையின் சார்பில் இரண்டு நாட்கள் கடல் சார் வணிகம் பற்றிய கருத்தரங்கமும் கண்காட்சியும் நடைபெற்றது .
நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக கோவை கஷ்டம்ஸ் புரோக்கர் மற்றும் ஷிப்பிங் ஏஜென்ட் அசோசியேசன் தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக அமேசான் லாஜிஸ்டிக் சேனல் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் மாணவருமான புவனேஸ்வரன் கலந்து கொண்டார்.
டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களில் கல்வி சார் இயக்குநர் முத்துச்சாமி, டாக்டர் கல்லூரியின் முதல்வர் சரவணன் மற்றும் வணிகவியல் புல முதன்மையர் பானுதேவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும் கலந்துகொண்டனர். மேலும், சர்வதேச பன்னாட்டு வணிகவியல் துறை சார்ந்த மாணவர்கள் பல்வேறு தலைப்பில் உரையாடினார்கள். இதன் மூலம் மாணவர்கள் கடல்சார் வணிகத்தின் பயன்பாடுகளைப் பற்றி அறிந்து பயன் அடைந்தனர்.