சென்னை இ.எஸ்.என். பதிப்பகம் மற்றும் இலண்டன் திறன் மேம்பாட்டுக் குழு இணைந்து, சென்னை குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தின.
இந்த நிகழ்ச்சியில், 1,575-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய நூல்கள் மற்றும் நூல் அத்தியாயங்களில் ஒரே நேரத்தில் கையொப்பமிட்டு உலக சாதனை படைத்தனர்.
இதில், கோவை நிர்மலா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 46 பேராசிரியர்கள் மற்றும் 4 மாணவர்கள் பங்கேற்று, தாங்கள் எழுதிய நூல்களில் கையொப்பமிட்டு உலக சாதனை முயற்சியில் இணைந்தனர்.
ஆசிரியர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிர்மலா மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் அதிக அளவில் பங்கேற்க ஊக்குவித்ததற்காக கல்லூரி முதல்வர் மேரி பபியோலாவுக்கு உலக சாதனைக் கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பேராசிரியர்களுக்கும் உலக சாதனைப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
