கோவை ராயல் கேர் மருத்துவமனையில், தாய்மார்கள் பாதுகாப்பான, வசதியான மற்றும் தனிப்பட்ட பராமரிப்புடன் குழந்தை பெற்றெடுக்கும் அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன மகப்பேறு மையமான ‘ராயல் கிரேடில் பிரசவ மையம்’ தொடங்கப்பட்டது.

விழாவுக்கு ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராயல் கிரேடில் மகப்பேறு பிரிவை திறந்து வைத்தார்.
கவுரவ அழைப்பாளராக சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பங்கேற்றார்.

தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரசவ மையத்தில், நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய பிரத்யேகப் பிரசவ அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவத் தகுதி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு, பிரசவ வலியின்போது நீரில் இருப்பது அல்லது நீரில் குழந்தை பெற்றெடுப்பது போன்ற வசதிகளும் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கல்யாண குமாரி, கலைவாணி, பிரேமலதா, வினோதினி, மற்றும் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, முதன்மை செயல் அதிகாரி மணி செந்தில் குமார், மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேசன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழயர்கள் கலந்து கொண்டனர்.
