தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. பதிவாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக, மனிதச் சங்கிலி நிகழ்வு கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.

துணிப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரம் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, பலன்தரும் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்வில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் தலைவர் பரணி, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் கார்த்திகேயன், மாணவர் நல மையத்தின் முதன்மையர் பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.

மாணவ மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.