கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை மற்றும் சுரப்பியல் துறை சார்பில் தைராய்டு மருத்துவம் குறித்த சர்வதேச கருத்தரங்கு கடந்த மாதம் நடைபெற்றது.

தைராய்டு குறித்து பற்பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட புதிய ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் குறித்து அறிந்துகொள்ள இக்கருத்தரங்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பல மருத்துவ வல்லுனர்கள்  சுமார் 300-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சுரப்பியல், நீரிழிவு, மகளிர் மருத்துவம் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு இக்கருத்தரங்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்திருந்தது என்று கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி குறிப்பிட்டார்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் சுரப்பியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் சிவஞானம், வித்யா ஜஹாகிர்தர், சங்கர் தண்டபாணி மற்றும்  துரைராஜ் அர்ஜுனன்  ஆகியோர் கருத்தங்கிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்கு கே.எம்.சி.ஹெச் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர்  அருண் பழனிசாமி பாராட்டினார்.