நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நேரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி பேசுகையில்: அறிவியல் மனப்பான்மை, புதுமை, மன உறுதி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வெற்றி அமைகிறது. அறிவு மற்றும் நேர்மையின் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
1,006 இளங்கலை, 141 முதுகலை மாணவர்கள் என மொத்தம் 1,147 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பான கல்விச் சாதனைகளைப் புரிந்த 60 இளங்கலை, 11 முதுகலை மாணவர்கள் உட்பட மொத்தம் 71 தரவரிசைப் பெற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கௌரவித்தது.
நிகழ்வில் நேரு கல்வி குழுமத்தின் கல்வி மற்றும் நிர்வாகப் பிரிவு, செயல் இயக்குநர் நாகராஜா, கல்லூரி முதல்வர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி மைதிலி ஞானப்பிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
