இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நவராத்திரி விஜயதசமியை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் ‘இந்துஸ்தான் கொலு’ என்ற தலைப்பில் கொலு வைக்கப்பட்டுள்ளது.

கொலுவை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் துவக்கி வைத்தார். செயலாளர் பிரியா, பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

13a scaled

கொலுவில் பாட்டி வடை சுட்ட கதை, புத்திசாலி காகம், சிங்கமும் எலியும் கதை, குரங்கும் முதலையும்  சுட்ட பழமும்  ஒளவையாரும், மனுநீதி சோழன் ஆராய்ச்சி மணி கதை, ஞானப்பழம் பெற்ற கதை, பிட்டுக்கு மண் சுமந்த படலம், விறகு வெட்டியும் வன தேவதையும், பூனையும் குரங்கும் கதை, கிருஷ்ண லீலா, ஆண்டாள் ஜனனம், பெண்பார்க்கும் படலம் முதல் திருமணம், வளைகாப்பு, காதணி விழா, பிறந்த நாள் விழா, மாதிரி கிராமம், பலசரக்கு கடைகள், காஞ்சிபுரம் காமாட்சி தேர் திருவிழா, முப்பெரும் தேவர் தேவியர், தசாவதாரம், அஷ்ட லட்சுமியர், பெருமாள் கருட சேவை, உலகளந்த பெருமாள், போன்ற பல்வேறு விதமான கண்கவரும் கருத்து சொல்லும் பொம்மை வடிவ கொலு காண்போரை வியக்க வைத்தது.