கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஹெச்.சி.எல் குரூப் நிறுவனத்தின் குவி கீக் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்  நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர்.

இதில் கல்லூரி சார்பில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகஅறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் குவி ஹெச்.சி.எல்நிறுவனத்தின் தொழில் நிறுவன துறையின் தலைவர் வினோத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கல்லூரி முதல்வர் சித்ராபேசுகையில், சமீபத்திய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் போன்றவற்றைக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் கல்லூரி மாணவிகள் வேலைவாய்ப்பில் பயன்பெறுவார்கள் என்பைதக் கருத்தில் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

கல்வித்துறையும் தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்படும்போது மாணவிகள் சமபத்திய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கும் தொழில்நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாணவிகளின் திறன் மேம்படுத்தவும் முடியும். இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாணவிகளின் தொழில்நுட்பத் திறன்களை வளர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.