கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் 29வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் கல்லூரியின் முதல்வர் சௌந்தர்ராஜன் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும்,சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நடுவரும் தற்போது கோவை புதூர் ஃபயர் ஸ்டேஷன்களின் ஃபயர் ஆபீஸருமான சூசைநாதன் மார்ட்டின் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

விழாவில் மூன்றாம் ஆண்டு மாணவி ஷர்மிளா வரவேற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் விளையாட்டு ஆண்டு அறிக்கை வாசித்தனர்.

பின்பு, பச்சை ,மஞ்சள், சிவப்பு ,நீளம், என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகளாக நடைபெற்றது. இதை தொடர்ந்து, மாணவர் பிரிவில்  தனிநபர் பட்டத்தை இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவன் எஸ்வந்த் மற்றும் மாணவியர் பிரிவில் இரண்டாம் ஆண்டு  ரோபோடிக்ஸ் துறை மாணவி நட்சத்திரா ஆகியோர் தனி நபர் பட்டத்தை வென்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவ மாணவியர் பிரிவில் மஞ்சள் நிற அணியினர் பெற்றனர் . ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற மஞ்சள் நிற மாணவ மாணவியர் அணியினருக்கு சிறப்பு விருந்தினர் சூசைநாதன் மார்ட்டின் மற்றும் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் கோப்பையை வழங்கினர்.