கோவை வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் அத்லெடிக் கிளப் சார்பில் வரும் ஜூலை 27ம் தேதி ரன் ஃபார் நேஷன் மாரத்தான் ஓட்டம் வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் 7000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் 150 மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இருசக்கர நாற்காலி கொண்டு பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் பங்கேற்றார். மேலும் மாரத்தான் நிகழ்வு விளம்பரத்தை மேயர் ரங்கநாயகி டி-சர்ட் வெளியீட்டு தொடங்கி வைத்தார்.

மாரத்தான் போட்டியிலிருந்து பெறப்படும் நிதி, 25க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தானில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1,50,000க்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும்.