கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் சர்வதேச செவிலியர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மாதவி வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முத்துசாமி, முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன், செவிலியர் இயக்குனர் மோகனாம்பாள், செவிலியர் கண்காணிப்பாளர் தீப்தி மேரி காந்திராஜ் கலந்து கொண்டனர்.
