காசியில் நடைபெற உள்ள ‘காசி தமிழ்ச் சங்கமம் 5.0’ நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவை-பனாரஸ் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, கோவை ரயில் நிலையத்தில் இருந்து டிச. 5-ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06053), டிச. 7-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பனாரஸ் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், பனாரஸ் நிலையத்தில் இருந்து டிச. 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06054), டிச. 14-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவையிலிருந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
