ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் குறித்த டிஜிட்டல் ஃபிலிப் புத்தகத்தைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், சிறப்பு விருந்தினர் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் நோய் மையம் இயக்குநர் குகன் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஷ் பங்கேற்று ஃபிலிப் புக் மற்றும் இலவச ப்ரோஸ்டேட் பரிசோதனை திட்டத்தை அறிமுகம் செய்தனர்.