சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்கள் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹரியானா குர்னாலிலுள்ள எஸ்பிஎஸ். கான்வெண்ட் பள்ளியில் நடைபெற்றது. ஒன்பது அணிகள் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் கலந்து கொண்டன.

லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சச்சிதானந்த பள்ளி மாணவர் அணி, முதல் போட்டியில் குஜராத் சஞ்சய் கோதாவத் பள்ளி அணியை வென்றது.

8c 1 scaled

இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் பிரின்ஸ் அகாடமி, பள்ளி அணியையும், மூன்றாவது போட்டியில் ஹரித்வார் எஸ்.ஆர்.வி.எம் பள்ளி அணியுடன் சமன் செய்தது.

நான்காவது போட்டியில் ஓமன் இந்தியன் ஸ்கூல் அல் சீப் பள்ளி அணியை வென்றது. அரையிறுதிப் போட்டியில் சட்டீஸ்கரைச் சேர்ந்த ஓபி. ஜிண்டால் பள்ளியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில், ஹரியானாவைச் சேர்ந்த சந்தன்பால் விகாஷ் பள்ளியிடம் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டு இரண்டாம் இடம் பெற்றது.

8a 7 scaled

அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சச்சிதானந்த பள்ளி மாணவர்களுக்கு ஹரியானா, கர்னால் மாவட்ட கூடுதல் துணை ஆணையர் ராகுல் ரையா, அரியானா மாநிலக் குழந்தைகள் நல கவுன்சிலின் கௌரவப் பொதுச் செயலாளர் மீனா கம்போஜ், கர்னால் மாவட்ட விளையாட்டு அலுவலர்  சத்யவீர் சிங் மற்றும் பள்ளியின் செயலர் கவிதாசன் ஆகியோர், கோப்பையையும் பதக்கங்களையும் வழங்கினர்.

மாணவர் அணியினரை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி பாராட்டினார். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ் வாழ்த்தினர்.