உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குமாறு, த.வெ.க. தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான சி. ஜோசஃப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், கஸ்தூரிநாயக்கன் பாளையம் பகுதியை சார்ந்த இளம் தொழில் அதிபரும், த.வெ.க. தொண்டருமான உமா மகேஷ்வரி, கோவை ஆனைக்கட்டி மலை பகுதியில் வாழும் மலை வாழ் பழங்குடிகளுக்கு அசைவ விருந்து வழங்கினார்.

பழங்குடிகள் மட்டுமின்றி அப்பகுதி வழிபோக்கர்கள், வாகன ஓட்டிகள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி அன்ன தானம் வழங்கினார். இதுகுறித்து த.வெ.க.வை சார்ந்த உமா மகேஷ்வரி பேசும்போது, தமிழ்நாட்டின் முதல்வரும் த.வெ.க. தலைவருமான விஜய் ஆணைக்கிணங்க, அன்னதானம் வழங்குவதாக தெரிவித்தார். பசி எனும் கொடுமையை நாட்டில் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்ற முதல்வர் விஜயின் உன்னதமான நோக்கத்திற்கு உறுதுணையாக இந்த அன்ன தானம் சேவையை செய்வதாக தெரிவித்தார்.
முதியோர், பெண்கள், சிறுவர்கள் என பலருக்கும் அசைவ விருந்து அன்னதானம் வழங்கியபோது மன நிறைவு தந்ததது. இதுபோன்று சேவைகளை முன்பிருந்து செய்து வருவதாக தெரிவித்த அவர், இன்றைய தினம் மட்டுமின்றி இனி வரக்கூடிய நாட்களிலும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். பசி இல்லாத மனித குலத்தை உருவாக்கும் விஜய் அண்ணாவின் உன்னத நோக்கத்திற்கு என்றும் உறுதுணையாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

