உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் ஐ.ஓ.பி வளாகத்தில் மே 18 அன்று சிறப்பு மருத்துவக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மே 20 வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சியை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி  துவக்கி வைத்தார். அவருடன் ஐ.ஓ.பி மருத்துவ இயக்குனர் டாக்டர் ராகவேந்திரா, மூத்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

GKNMH 3 scaled

உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது, அதை கட்டுப்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக ரத்த அழுத்த பரிசோதனை, உணவுத்துறை ஆலோசனை, பிசியோதெரபி துறையின் உடற்பயிற்சி ஆலோசனை, கண் சிகிச்சைத் துறை ஆலோசனை மற்றும் மாற்று மருத்துவத் துறை ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முதல் நாளன்று இதயத் துறை, சிறுநீரகத் துறை, பொது மருத்துவத் துறை, நரம்பியல் துறை மற்றும் கண் பரிசோதனைத் துறை மருத்துவர்களால் “உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் ஆரோக்கியம்” தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்துறை மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற்றனர்.

இரண்டாம் நாளன்று இதயத் துறை மற்றும் பொது மருத்துவத் துறை மருத்துவர்களின் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

GKNMH 2 scaled

மூன்றாம் நாளன்று மாற்று மருத்துவத் துறையினரால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு சாதாரண நோயாக மட்டும் அல்ல; அது வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய ஒரு நிலை. சரியான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.