அட்சய திருதியை முன்னிட்டு வழக்கமாக விற்பனை அமோகமாக இருக்கும் சூழலில் கோவையில் வழக்கத்தை காட்டிலும் விற்பனை சரிந்து 60% விற்பனை மட்டுமே நடைபெற்றதாக தங்கநகை கோவை மாவட்ட உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் காலை முதலே வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் தங்கத்தை வாங்கி சென்றனர்.

இருப்பினும் வழக்கத்தை காட்டிலும் 60% விற்பனை மட்டுமே நடைபெற்றதாக கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.மேலும் தங்கத்தின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 18ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் இதன் காரணமாக 8 கிராம் வாங்கும் வாடிக்கையாளர்கள் 6 கிராம் வாங்குவதாகவும் 4 கிராம் வாங்குபவர்கள் இரண்டு கிராம் வாங்குவதாகவும் 2 கிராம் வாங்குபவர்கள் ஒரு கிராம் மட்டுமே வாங்குவதாகவும் கூறிய அவர் விற்பனையில் 60 சதவிகிதமும் எடையைப் பொறுத்தவரை 40 சதவிகிதம் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

gold 2

மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் குறைய வாய்ப்பில்லை எனவும் பொதுமக்கள் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்காமல் சிறிது சிறிதாக தங்கத்தை சேமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.