ரயில் பயணிகளுக்கான புதிய வசதியாக Swarail (ஸ்வாரயில்) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு ஐஆர்சிடிசி ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அதிகப் பேர் முயற்சிக்கும் காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டு, டிக்கெட் கிடைக்காமல் போய்விடும்.

இந்த பிரச்சனைக்கு மாற்றாக ஸ்வாரயில் செயலி அறிமுகமாகியுள்ளது. இந்த ஆப்பில்: டிக்கெட் முன்பதிவு;தட்கல் முன்பதிவு;உணவு ஆர்டர்;பிஎன்ஆர் நிலை அறிதல் ;பிளாட்பார்ம் டிக்கெட் வாங்குதல் போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.

முக்கியமானது, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இணைய சேவை தடங்கலின்றி வேகமாக செயல்பட இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மூலம், பயணிகள் இனி அளவு நேரத்திலும் தடங்கலின்றியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.