கிராமப்புறங்களில் உள்ள வீட்டுச் சுவர்களில் வறட்டி காய வைக்கும் பழக்கம் முன்பு இருந்தது. தற்போது, அந்த பழக்கம் பெரும்பாலான கிராமங்களில் நடைமுறையில் இல்லை என்றாலும், ஏன், அவ்வாறு சுவர்களில் வறட்டி தட்டினார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.
வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். அன்றைய காலகட்டங்களில் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ அவ்வளவாக இருந்ததில்லை. நாட்டு மாடுகளின் ஏ2 சாணம் மிகச்சிறந்த கிருமி நாசினி. 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணம், தொற்று கிருமிகளை அழிக்க வல்லது.
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள், இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீட்டில் அணுக் கதிர்கள் துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறி உதவுகிறது. ஆனால், இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. அதனால்தான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டு சுவர்களில் சாணம் தட்டி வந்தனர்.
மேலும், இம்மாதிரியான வறட்டி தட்டும் போது கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயைக் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சுற்றிலும் வறட்டிகளைக் கொண்ட வீடுகளில் ஒரு மண்டலம் புழங்கி வந்தால் அலர்ஜி, புற்றுநோய், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என நம்பப்படுகிறது. இதன் மகத்துவம் அறிந்து வறட்டி தயாரிக்கும் முறைக்கு வெளிநாடுகள் காப்புரிமை பெற்றுள்ளன.